• Apr 20 2024

வாரிசு சூட்டிங் செட்டிற்கு திடீரென விசிட்டடித்த சிம்பு- வெளியாகிய அட்டகாசமான கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் விஜய். இவர் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்துள்ளார்.இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது.  இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் சிம்பு கலந்து கொண்டுள்ளார். 


இயக்குநர் வம்ஷியுடன் சிம்பு படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement