• Mar 23 2023

தலை முடி வளர்த்து.. உடல் எடை குறைத்து.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயுள்ள சிம்பு.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 5 days ago

Advertisement

Listen News!

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் 'பத்து தல'. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படமானது வரும் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்நிலையில் இப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. இதனால் தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார் சிம்பு. மேலும் நீண்ட நாட்களாகவே ‘பத்துதல’ படத்தின் தோற்றத்தில் தான் சிம்பு வலம் வந்து கொண்டிருந்தார். 


இதனால் இந்தப் படத்திற்கு பின்னர் சிம்புவை புதிய தோற்றத்தில் பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில், தற்போது சென்னை திரும்பியுள்ள சிம்பு நீண்ட தலைமுடியுடன் கூடிய புதிய தோற்றத்தில் இருக்கின்றார். இதுகுறித்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement