• Apr 25 2024

'பத்து தல'ன்னு சொல்லிட்டு இப்படி பண்ணி வச்சிருக்காங்களே.. படம் பார்த்துவிட்டுப் புலம்பும் சிம்பு ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சிம்புவின் நடிப்பில் இன்றைய தினம் 'பத்து தல' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. இதனைப் பார்ப்பதற்காக தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருக்கின்றது. இப்படத்திற்கு பல பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வந்தாலும் ஒரு சிலர் இப்படத்தைப் பார்த்து கடுப்பாகியுள்ளனர்.


அதாவது சிம்பு தான் இந்த படத்தின் ஹீரோ எனக் கூறி பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா எல்லாம் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஆனால், இந்த படத்தில் சிம்பு வெறும் கேமியோ ரோலில் தான் நடித்துள்ளார் என்றும் கவுதம் கார்த்திக் தான் ஹீரோ என்றும் அவருக்குத்தான் பிரியா பவானி சங்கர் ஜோடி என்றும் கூறி படத்தைப் பார்த்த ரசிகர்கள் தற்போது இணையத்தில் தாறுமாறாக புலம்பி வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது முதல் சீனில் சிஎம் கடத்தப்பட்ட நிலையில், லாங் ஷாட்டில் ஏஜிஆர் சிம்பு அடுத்த சிஎம்மை ஆட்சியில் அமர வைத்த நிலையில், அவருக்கு வாழ்த்து சொல்லும் காட்சி ஒன்று மாஸாக இடம்பெறுகிறது. ஆனால் அதற்குப் பிறகு ஏஜி ராவணனுக்கான கதாபாத்திர பில்டப்புகள் முதல் பாதி முழுக்க நிறைந்து கிடக்கிறது. மணல் மாஃபியா டானான அவரது லாரி செல்ல ரெட்டின் கிங்ஸ்லி ரயிலை எல்லாம் நிறுத்தும் காட்சிகள் பலவும் இடம்பெற்றுள்ளன. ஏஜிஆர் ஆட்டத்தை அடக்க அண்டர் கவர் போலீஸாக நடிகர் கவுதம் கார்த்திக் எந்தவொரு சஸ்பென்ஸும் இல்லாமல் போலீஸாரால் உடனடியாக அனுப்பப்படுகிறார்.


இவ்வாறாக முதல் பாதி முழுக்கவே கௌதம் கார்த்திக்கின் நடிப்புத் தான் தங்களை கட்டிப் போட்டு வைத்திருந்ததாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அத்தோடு முதல் பாதி முடிவில் தான் ஹெலிகாப்டரில் இருந்து சிம்பு வந்திறங்கும் காட்சியே வருவதால் பத்து தல படத்தில் வெறும் பாதி தலையாகவே சிம்பு இருக்கிறாரே என ரசிகர்கள் செம கடுப்பாகி இருக்கின்றனர்.

மேலும் ஹெலிகாப்டரில் படு மாஸாக சிம்பு இறங்கி கேஜிஎஃப் படத்தில் முகத்தை காட்டியது போல காட்டுவார்கள் என எதிர்பார்த்த சிம்பு ரசிகர்களுக்கு வெறும் சிம்புவின் கால் மட்டுமே மிஷ்கின் படம் போல காட்டப்பட்டது . இந்த விடயமானது மேலும் அவர்களின் கடுப்பை கிளப்பி உள்ளது. 


மொத்தத்தில் படம் பார்த்த ரசிகர்கள் "பத்து தல என்று சொன்னாங்க ஆனால் பாதி தலை தான் இருக்கு" எனக் கூறி புலம்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement