• Mar 23 2023

சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து ஆட்டம் போட்ட சிம்பு- இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

stella / 4 days ago

Advertisement

Listen News!


 சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா  சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.

அத்தோடு இவ் விழாவிற்கு ப்ரியா பவானி ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமார், கௌதம் கார்த்திக் சிம்புவின் பெற்றோர் என ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


இது ஒருபுறம் இருக்க, இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிம்புவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.  சிம்புவை வாழ்த்தி தனுஷ், விஜய், கமல், போன்ற பிரபலங்கள் பேசி இருந்த பழைய வீடியோக்களை பட குழுவினர் தொகுத்து தற்போது ஒளிபரப்பினர். இது சிம்புவுக்கு மட்டுமின்றி  அவரின் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாகவே அமைந்தது.

இந்த நிலையில் சாண்டி மாஸ்டர் இந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிக் கொண்டே மேடையில் இருந்து இறங்கி சிம்புவிடம் வந்தார். உடனே சிம்புவும் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement