• Jun 04 2023

STR 48 படத்துக்காக லண்டனில் பயிற்சி எடுக்கக் கிளம்பிய சிம்பு- இப்போ இந்த ரிஸ்க் தேவையா?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


சிம்பு தற்போது STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள இந்தப் படம் பல கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்கள் மூலம் கம்பேக் கொடுத்த சிம்புவுக்கு STR 48 வேற லெவல் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக எழுதிய கதையை சிம்புவுக்காக மாற்றியுள்ளார் தேசிங் பெரியசாமி. முக்கியமாக இந்தப் படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் படுமிரட்டலாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் தெறிக்கவிடும் என்றும் சொல்லப்படுகிறது. 


இதற்காகவே பத்து தல படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக தாய்லாந்து பறந்தார் சிம்பு. பத்து தல படத்திற்காக வெயிட் போட்டிருந்த சிம்பு, அதனை குறைத்ததோடு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளையும் கற்றுக்கொண்டு வந்தார். பத்து தல ஆடியோ வெளியீட்டு விழாவில் காளை படத்தின் சிம்பு போல செம்ம ஸ்லிம்மாக ஹிப்பியெல்லாம் வைத்துக்கொண்டு மாஸ் காட்டினார். இதனால், STR 48 படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இந்தப் படம் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், STR 48 படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், அதற்குள் சிம்பு லண்டன் பறந்துவிட்டாராம். கடந்த வாரம் திடீரென லண்டன் பறந்த சிம்பு, அங்கும் STR 48 படத்துக்காக சில பயிற்சிகள் எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவும் தற்காப்பு கலைகள் தான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுவரை தான் நடித்த எந்த படங்களுக்கும் எடுக்காத ரிஸ்க்கை எடுக்கவுள்ளாராம். அதற்காகவே சிம்பு லண்டன் சென்றுள்ளதாகவும், அதனால் தான் STR 48 படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், சிம்பு ஜோடியாக நடிக்க பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷிடமும் இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசி வருகிறாராம்.


Advertisement

Advertisement

Advertisement