• Jun 01 2023

தி கேரளா ஸ்டோரி படத்தினால் சிம்பு பட நடிகைக்குக் கிளம்பிய எதிர்ப்பு...!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சித்தி இத்னானி. இதனையடுத்து பல படங்களில் நடித்த இவர் தற்போது ஆர்யாவுடன் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம், ஹரிஷ் கல்யாணுடன் நூறுகோடி வானவில் ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சர்ச்சை கதையம்சம் கொண்ட தி கேரளா ஸ்டோரி படத்தில் சித்தி இத்னானி கீதாஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்துக்கு பல இடங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்தவகையில் தமிழ் நாட்டில் கேரளா ஸ்டோரி திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்னால் போராட்டங்கள் நடந்தன. 


இவ்வாறு சர்ச்சைக்கு மத்தியில் சிக்கியுள்ள இந்த படம் குறித்து சித்தி இத்னானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "தி கேரளா ஸ்டோரி வெறுப்பை உமிழும் படம் இல்லை. விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். கேரளா ஸ்டோரி எந்த மதத்துக்கும் எதிரான படம் இல்லை. பயங்கரவாதத்தைத்தான் இந்த படம் எதிர்க்கிறது. எனது கடமையை நடிகை என்ற முறையில் சரியாக செய்து இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.

நடிகை சித்தி இத்னானியின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கேரளா ஸ்டோரி படத்தில் எப்படி நடிக்கலாம்? உங்கள் படத்தை புறக்கணிப்போம் எனப் பலவாறு கருத்துகள் பதிவிட்டு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement