தன் காதலியின் மடியில் மரணமடைந்த சித்தார்த் ஷுக்லா- கதறி அழும் காதலி

110761

கடந்த சில மாதங்களாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாவது அனைவருக்கும் அதிர்ச்சியளித்து வருகின்றது என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்றைய தினம் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13 இன் ரைட்டில் வின்னரும் பிரபல பாலிவுட் நடிகருமான சித்தார்த் ஷுக்லா நேற்று திடீரென மரணமடைந்தார்.

மேலும் 40 வயது மட்டுமே ஆகியுள்ள சித்தார்த் ஷுக்லா திடீரென மாரடைப்பு காரணமாக இறந்துள்ளது, ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது . மேலும் இவரும் நடிகை ஷெஹ்னாஸ் கில்லும் காதலித்து வந்தனர் .இந்நிலையில் சித்தார்த் இறப்பதற்கு முந்தைய நாள் இரவு என்ன நடந்தது என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது சித்தார்த் இரவு 9.30 மணி அளவில் வீட்டிற்கு வந்திருக்கிறார் . வீட்டிற்குள் நுழைந்துதம் தனக்கு ஏதோ மாதிரியாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு அம்மாவும், ஷெஹ்னாஸும் சேர்ந்து லெமன் ஜூஸும், ஐஸ்க்ரீமும் கொடுத்திருக்கிறார்கள். அப்படியும் தனக்கு ஒரு மாதிரியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓய்வெடுக்குமாறு அம்மாவும், ஷெஹ்னாஸும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் சித்தார்த்தால் தூங்க முடியவில்லை. இதையடுத்து தன் அருகிலேயே இருக்குமாறு ஷெஹ்னாஸிடம் கூறியிருக்கிறார். இரவு 1.30 மணி அளவில் ஷெஹ்னாஸின் மடியில் தலை வைத்து தூங்கியிருக்கிறார் சித்தார்த். இதையடுத்து ஷெஹ்னாஸும் தூங்கிவிட்டார். காலை 7 மணிக்கு எழுந்து பார்த்தபோது சித்தார்த் அசையாமல் இருந்திருக்கிறார்.

மேலும் எழுப்ப முயன்றபோது கண்ணை திறக்கவில்லை.சித்தார்த் அசையாமல் இருந்ததை பார்த்த ஷெஹ்னாஸ் பயந்துபோய் அவரின் குடும்பத்தாரை அழைத்திருக்கிறார். அவர்கள் தங்கள் குடும்ப டாக்டரை வரவழைத்தனர். சித்தார்த்தை பரிசோதனை செய்த டாக்டரோ அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்திருக்கிறார். சித்தார்த் இல்லை என்பதை ஏற்க முடியாமல் ஷெஹ்னாஸ் தவிப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.