• Apr 25 2024

நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது காதலிக்கு வாழ்த்து கூறிய சித்தார்த்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இடம் படித்தவர் தான் சித்தார்த்.இந்த படம் பாமிலி ஆடியன்ஸிற்கு பிடித்துப் போக அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது.அதன் பிறகு மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த நடிகர் சித்தார்த். 180 படத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.

அப்போது இவர் நடித்த காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டுமஆனால் காவிய தலைவன் திரைப்படத்தின் மூலம் தன்னை நிலநடுத்திக்கொண்டார் நடிகர் சித்தார்த்.

அத்தோடு படங்களை தவிர்த்து சமுக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் சிக்கி வந்தார் சித்தார்த். சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்த நிலையில் இருவரும் சில காரணங்களால் பிரிந்தனர்.

இந்நிலையில் சித்தார்த் கடைசியாக மஹா சமுத்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடித்திருந்தார், அப்படத்தை தொடர்ந்து அவர்கள் இருவரும் ஜோடியாக தான் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் பரவிய நிலையில் இன்று அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.அதாவது நடிகை அதிதி தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு உருகி வாழ்த்து கூறியுள்ளார் சித்தார்த்.

இருவரும் காதலிப்பது போல தெரிந்தாலும் அவர்களிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.இதோ அந்த பதிவு....



Advertisement

Advertisement

Advertisement