• Feb 04 2023

ஒரே மாதிரி வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்து ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கிய சித்தார்த் மற்றும் அதிதி ராவ்- அப்போ காதலிப்பது உண்மையா?

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் சித்தார்த். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஆய்த எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.அந்த வகையில் இறுதியாக தெலுங்கில் வெளியான மஹா சமுத்திரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதில், ஷர்வானந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் அவருடன் இணைந்து நடித்திருந்தனர்.


இதற்கு அடுத்தபடியாக, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் "இந்தியன் 2" திரைப்படத்தில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த நிலையில், சமீபத்தில் சித்தார்த் பகிர்ந்த புகைப்படத்தில் உள்ள டீ ஷர்ட் குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மஹா சமுத்திரம் திரைப்படத்தில் நடித்த சமயத்தில், சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் நண்பர்களாக மாறி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், சித்தார்த் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், "Dogue" என குறிப்பிடப்பட்டு வெள்ளை நிற டி ஷர்ட் ஒன்றை சித்தார்த் அணிந்திருப்பது தெரிந்தது.

 மேலும், இந்த பதிவின் கீழ் நடிகையும் சித்தார்த்தின் தோழியான அதிதி ராவ் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அசத்தலான கமெண்ட்டுகளையும் செய்து வந்தனர்.அப்படி ஒரு சூழலில் தான், சித்தார்த் அணிந்திருக்கும் இதே  டி ஷர்ட்டை போன்று நடிகை அதிதி ராவ் அணிந்திருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் பகிர்ந்து இரண்டையும் ஒப்பிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement