• Mar 23 2023

தவறை உணர்ந்து தற்கொலை செய்து கொள்ள துணிந்த ஸ்ருதி- தடுத்து நிறுத்திய சக்தி- நெகிழ்ச்சியான தருணம்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சீரியல் தான் மௌனராகம் சீசன் 2. இந்த சீரியலில் ஸ்ருதிக்கு கார்த்திக் தன்னுடைய அப்பா இல்லை என்ற உண்மை தெரிந்து விட்டது. இதனை ஸ்ருதி காதாம்பரியிடமே போய் கேட்டார்.

ஆனால் காதாம்பரி  உண்மையை சொல்லாமல் மறைத்து விட்டார். இதனால் அந்த ரிப்போட்டை டாக்டரிடம் கொண்டு போய் கேட்கும் ஸ்ருதிக்கு டாக்டர் எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டார். இதனால் மனமுடைந்துள்ள ஸ்ருதி தற்கொலை செய்வதற்காக போகின்றார்.

ஸ்ருதி இப்படி தவறான முடிவு எடுத்திருப்பதை அறிந்த சக்தி ஸ்ருதியை தடுத்து நிறுத்தியதோடு தனக்கு எல்லா உண்மைகளும் தெரியும் நீ என் தங்கச்சி என்று கூற ஸ்ருதி சக்தியை கட்டிப்பிடித்து அழுகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதோடு இது  ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement