• Jun 04 2023

ஹீரோவிற்கு இணையான சம்பளம் வேண்டும்.. பிரபல நடிகையை புகழந்து தள்ளிய ஸ்ருதி ஹாசன் பேச்சு

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். மேலும் இவர் நடிப்பில் அடுத்ததாக சலார் திரைப்படம் உருவாகி வருகிறது.

கதாநாயகனுக்கு இணையான சம்பளம் ஹீரோயின்களுக்கும் வேண்டும் என தொடர்ந்து பேசப்பட்டு கொண்டே தான் உள்ளது.

பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஹீரோவுக்கு இணையாக தனக்கு சம்பளம் கிடைத்துள்ளது என்றும், இந்த உயரத்துக்கு வர தனக்கு 20 ஆண்டுகள் ஆகி உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.


இதுகுறித்து நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது, "பிரியங்கா சோப்ரா ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெற்றதன் மூலம் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறார். அத்தோடு ஹாலிவுட் ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை அவர் வாங்கியதாக தெரிவித்து இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது".


"நாங்கள் எல்லாம் இன்னும் உழைத்துக்கொண்டு இருக்கிறோம். நமது சினிமா துறையில் ஹீரோவிற்கு இணையான சம்பளம் குறித்து எந்த பேச்சும் எழுவது இல்லை. ஹீரோக்களுக்கு சமமான சம்பளம் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் நாள் வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement