• Apr 25 2024

வெறித்தனமான கிக்-பாக்ஸிங் பயிற்சியால் அதிர விட்ட ஸ்ருதி ஹாசன்.! வைரல் வீடியோ…

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் தனது நடிப்பைத் தவிர, அவர் தனது சமூக வலைத்தளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவரது தினசரி வேலை பற்றி தனது ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார். அது போட்டோஷூட் ஆகட்டும் அல்லது ஒர்க்அவுட் புகைப்படங்களாகட்டும் அல்லதுஅவர் காதலிக்கும் சந்தனு ஹசாரிகாவை இருக்கட்டும் எதையும் மறைப்பதில்லை.

சமீபத்தில், ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது உடற்பயிற்சியின் வீடியோவை பகிர்ந்துகொண்டார். அந்த வீடியோவில், அவர் கருப்பு ஜிம் ஆடைகளை அணிந்து கிக் பாக்ஸிங் பயிற்சி செய்வதை காணலாம். வீடியோவில் அந்த அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாக கிக் பாக்ஸிங் செய்கிறார்.

மேலும் அந்த பதிவில், ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பயிற்சிக்கு என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

அவர் நடித்த வீர சிம்ஹா ரெட்டி மற்றும் வால்டேர் வீரய்யா ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அவர் அடுத்ததாக பிரபாஸுடன் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சாலார்’ படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement