• May 29 2023

அந்த இடத்தல் டாட்டூ போட்டதால் வெடித்த சர்ச்சை... விளக்கம் அளித்த ஸ்ருதி ஹாசன்

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மேலும்  இவர் தமிழ் படங்களை தாண்டி பிற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.


சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் முதுகில் ஸ்ருதி பெயருடன் அருகில் முருகன் வேல் குறியீட்டை டாட்டூவாக போட்டுள்ளார்.

அத்தோடு அதை புகைப்படம் எடுத்த சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பெரும் சர்ச்சையை பேசப்பட்டது.


எனினும் தற்போது இது குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன்," நான் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். இளம் வயதில் ஸ்ருதி என்று டாட்டூ போட்டு கொண்டேன். தற்போது அதன் அருகில் முருகனின் வேல் சின்னத்தை டாட்டூ போட்டு கொண்டேன். இது நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று ஞாபகம்படுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement