• Apr 19 2024

மாலை அணிவித்து மேள தாளத்துடன் ரசிகர்களால் வரவேற்கப்பட்ட ஷிவின்-வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களாக விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் இருந்த நிலையில், அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, கார் மற்றும் பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.


முன்னதாக இந்த நிகழ்ச்சியில் விக்ரமன்தான் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அசீம் வெற்றிப் பெற்றுள்ளார். இதையடுத்து விஜய் டிவியை புறக்கணித்து பலரும் ஹேஷ்டேக் வெளியிட்டனர்.

இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்துள்ள விக்ரமன் தற்போது தனது முதல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களின் அன்பு குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார். இந்த அளவிற்கு தன்மீது ரசிகர்கள் அன்பு செலுத்துவார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இவரைப் போல இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற திருநங்கை ஷிவினுக்கும் ரசிகர்களிடம் இருந்து வரவேற்பும் பாராட்டும் குவிந்து வரும் நிலையில் தற்பொழுது ஷிவினை வரவேற்ற வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.








Advertisement

Advertisement

Advertisement