Saturday, May 28, 2022

புஷ்பா படத்தின் ‘சாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவாங்கி- எப்படி ஆடுகிறார் என்று பாருங்க

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகள் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்துள்ளன. அந்த வகையில் பல சீசன்களைக் கடந்து ஹிட்டாக ஓடும் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடகியாக பிரபலமானவர் ஷிவாங்கி.

இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஓர் இடம்பிடித்தவர் ஷிவாங்கி. அத்தோடு தற்போது, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனின், டான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், தற்போது மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 3ல் கோமாளியாக களமிறங்கியுள்ளார். இதன் அறிமுக நிகழ்ச்சி கூட கடந்த வாரம் இடம் பெற்றது.

இந்நிலையில், புஷ்பா படத்தில் ‘சாமி சாமி’ பாடலுக்கு நடிகை ராஷ்மிகா ஆடியதை போலவே நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷிவாங்கி. இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்