• Oct 09 2024

என் முழு சந்தோசமும் இவள் தான் - முதன் முறையாக தன் காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் தேவர் கொண்டா

stella / 1 year ago

Advertisement

Listen News!

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்ததன் மூலன் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் விஜய் தேவர்கொண்டா. தற்போது இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகர்களுள் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்ட நடிகர் என்ற பெருமையை விஜய் தேவர்கொண்டா பெற்றுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு கீதா கோவிந்தம், டாக்சிவாளா போன்ற வெற்றி படங்களில் நடித்தார். அதைத்தொடர்ந்து நோட்டா, டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடிக்க அந்த படங்கள் தமிழிலும் வெளியாகின. அதன் மூலம் தமிழ் ரசிகர்களையும் குறிப்பாக பெண் ரசிகர்களை கவர்ந்தார் விஜய் தேவர் கொண்டா.


தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக இருப்பது மட்டுமன்றி வருடந்தோறும் 500 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறார் விஜய் தேவரகொண்டா. அது மட்டுமன்றி தன்னுடைய King Of The Hill ப்ரோடுக்ஷன்ஸ் மூலம் திறமையான புது முக நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார்.

இவர் நடிப்பில் தற்பொழுது குஷி என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் செப்டெம்பர் மாதம் 1ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படியான நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பெண்ணின் கையைப் படித்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு என் வாழ்க்கையின் முழு சந்தோஷம், விரவில் இறு குறித்து அறிவிப்பேன் என்று வெளியிட்டுள்ளார்.


இதனால் ரசிகர்கள் பலரும் இது ராஷ்மிகா மந்தனாவாக இருக்குமோ என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement