• Apr 19 2024

சாந்தனுவின் ''இராவண கோட்டம்''பட விமர்சனம் - பயில்வான் என்ன சொல்லியிருக்காரு பாருங்க.!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கிஉள்ள திரைப்படம் இராவண கோட்டம்.

இதில், சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ள படத்தை பயில்வான் ஆராய்ந்துள்ளார்.

 ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு என இரண்டு தெருங்கள் இருக்கின்றன. மேலத்தெரு, கீழத்தெரு என்றால், மேல்சாதி, கீழ்சாதி என்று பொருள் அதை நேரடியாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார். மேலத்தெருவில் பண்ணையார் பிரபுவின் மகன் சாத்தனு பாக்யராஜ். அதே போல கீழத்தெருவில் இருக்கும் இளவரசனும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், மெயின் கதை என்னவென்றால், ராமநாதபுரத்தில் கருவேலம் முள் செடிகள் அதிகமாக வளர்ந்து அந்த நிலத்தடி நீரை குடித்துவிடுகிறது. இதனால், அந்த மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீர் பஞ்சத்திற்கு கருவேல மரம்தான் காரணம் என்பது தெரியவர, கிராம மக்கள் இணைந்து கருவேல மரங்களை வெட்டுகிறார்கள்.

ஆனால், கார்ப்பரேட் கம்பெனி ஒன்றை கிராமத்தில் இயற்கை வளத்தை சுரண்ட அனுமதிக்கவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் இரு சமூகத்திடையே கலவரத்தை ஏற்படுத்துகிறது. இதில் சாந்தனு கயல் ஆனந்தியை காதலிக்கிறார். அதே நேரம் இளவரசனு ஆனந்தியை காதலிப்பதால், இருவரின் நட்பிலும் விரிசல் ஏற்படுகிறது. இதனால், ஒற்றுமையாக இருந்த கிராமத்தில் பகையை வளர்ந்து ஆதாயம் தேடுகிறது கார்ப்பரேட் கம்பெனி.

இந்த படத்தில் சாந்தனு  ,உடலை வறுத்திக்கொண்டு கடுமையான உடல் உழைப்பை கொடுத்து இருக்கிறார். இந்த படத்திற்காக உண்மையிலே தனது நிறத்தையே மாற்றி கதாபாத்திரத்தோடு ஒன்றி இருக்கிறார். சாந்தனு பாக்கியராஜின் நடிப்பு ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அதே போல ஹீரோயின் கயல் ஆனந்தியும் சின்ன சின்ன விஷயங்களைக்கூட மிக அழகா செய்து இருக்கிறார்.

மேலும், பாலுமகேந்திரனின் சீடரான விக்ரம் சுகுமாறன் அவரைப்போலவே எதார்த்தமான காட்சிகளை அமைத்து மனதை கசக்கி பிழிந்துள்ளார். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் ஒரு கிராமத்தில் நாமும் வாழ்வதைப்போல ஒரு உணர்வை கொடுத்து உள்ளார். போலி அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்தை படத்தில் துணிந்து சொல்லி இருக்கும் இயக்குநர் விக்ரம் சுகுமாறை நிச்சயம் பாராட்ட வேண்டும்.


Advertisement

Advertisement

Advertisement