• Apr 16 2024

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்- 2...வெளியான சூப்பர் அப்டேட்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட்  ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .


இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். அத்தோடு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள்.

முத்துராஜ் கலை இயக்குநராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். அத்தோடு ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

அத்தோடு கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு சென்னையில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.


இவ்வாறுஇருக்கையில், இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நாளை மறுநாள் 21 ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement