• Apr 24 2024

ஹாப்பி பர்த்டே டார்லிங் என செல்ல மகளை கட்டிப்பிடித்து வாழ்த்துக் கூறிய ஷாலினிஅஜித்! -வைரல் போட்டோஸ்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக இருப்பவர் தான் அஜித். இவர் நடிப்பில் தற்பொழுது துணிவு என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்பபடம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி உள்ள இப்படத்தின்  ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த படத்தின் ட்ரெய்லர் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, ஒரே நாளில் 20 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட சாதனையை படைத்தது.


பொதுவாக நடிகர் அஜித், சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றாலும்.. இவருடைய மனைவி ஷாலினி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். மேலும் அவ்வபோது ரசிகர்கள் அதிகம் பார்த்திடாத தன்னுடைய குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் அஜித் தன்னுடைய குடும்பத்தோடு புத்தாண்டு கொண்டாடியபோது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை ஷாலினி பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் நேற்று வெளியாகி, மிகவும் வைரலாக பார்க்கப்பட்டது.இதைத்தொடர்ந்து தன்னுடைய மகள் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.


ஹாப்பி பர்த்டே டார்லிங் என கேப்டன் போட்டு... ஷாலினி மகளைக் கட்டிப்பிடிக்கும் புகைப்படம் ஒன்றையும், அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ரசிகர்களும் அனோஷ்காவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement