• Apr 25 2024

மைனாவின் ஒரு நாள் சம்பளத்தை கேட்டு ஷாக்கான தனம் – டைட்டில் வின்னர் அமௌன்ட இப்பவே சம்பாதிச்சிட்டாரே...என்னங்க சொல்றீங்க..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு மைனா நந்தினி வாங்கும் சம்பளம் குறித்த சர்ச்சை வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில்  வைரலாகி வருகிறது. மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நந்தினி. இவர் சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதிலும் விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.எனினும்  அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.இதன் பின் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நந்தினி நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்.

இடையில் நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குநராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. அத்தோடு  தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல், படங்கள் என்று மைனா நந்தினி பிசியாக கலக்கிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் மைனா நந்தினி விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தின் மூலம் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அத்தோடு இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மைனா அவர்கள் சேப் ஆகவும், பிறரை கலாய்த்தும் விளையாடி வருகிறார். இது குறித்து கமல் கூட கண்டித்து இருந்தார். இருந்தும், மைனா நந்தினி, மணியுடன் கேங்க் ஃபார்ம் செய்து கொண்டு விளையாடி வருகிறார்.

அந்த வகையில் இந்த வாரம் சினிமா பிரபலங்களைப் போல் மாறுவேடம் அணிந்து நடனம் ஆட வேண்டும் என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்திருக்கிறது. எனினும் அந்த வகையில் மைனா நந்தினிக்கு நாய் சேகர் கெட்டப் கொடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மைனாவின் சம்பளம் குறித்த ஒரு சர்ச்சை வீடியோ சமூகவலைத்தளத்தில்  வைரலாகி வருகிறது. அதாவது மைனாவும், மணியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மணி ஒரு நாளைக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படி செய்வதாக என்று பேசுகின்றார்.

உடனே இரண்டு லட்சம் என்று நந்தினி கூறுகிறார். இதை கேட்டு தனம் அதிர்ச்சியாகி ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சமா! அப்ப 60 நாளைக்கு எவ்வளவு என்று ஆச்சரியத்தில் கேட்கிறார். அதற்கு மணி, ஒரு 90 லட்சம் கிட்ட இருக்கும் என்று கூறுகிறார். இப்படி இவர்கள் பேசிருக்கும் வீடியோ தான் சமூகவலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்து நெட்டிசன்கள் பலருமே, மொத்த பிக்பாஸோட டைட்டில் வின்னர் பரிசே 50 லட்சம் தான். எதுக்குடா இப்படி எல்லாம் ரீல் விடுறீங்க? என்று மைனாவையும் மணியையும் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.




Advertisement

Advertisement

Advertisement