சீரியல் நடிகை ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா?- அட இவர் தொகுப்பாளினி டிடி யின் அக்காவாச்சே

தமிழ்த் தொலைகடகாட்சிகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாகத் தொகுத்து வழங்கக் கூடிய பல தொகுப்பாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் 20 வருடங்களுக்கு மேலாக விஜய்டிவியில் பிரபல்யமான தொகுப்பாளராக இருப்பவர் தான் திவ்யதர்ஷினி. இவர் டிரண்டிற்கு ஏற்றார் போல் தன்னையும் அப்டேட் செய்து கொண்டே இருப்பார்.

மேலும் தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியிலும் எப்போதும் மக்களை ஈர்க்கும் வண்ணம் நிறைய விஷயங்கள் செய்வார். இவரைப் போலவே இவரது அக்கா பிரியதர்ஷினியும் தொகுப்பாளினி. இவர் இதுவரை 1000க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என நடத்தியுள்ளார்.

அத்தோடு குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்திருப்பதோடு 1998ம் ஆண்டு விழுதுகள் என்ற தொடர் மூலம் சீரியலிலும் நடிக்க ஆரம்பித்தார்.

இதற்குப் பிறகு பல சீரியல்களில் நடித்துவந்த பிரியதர்ஷினி மானாட மயிலாட, பாய்ஸ் Vs கேள்ஸ் போன்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார். இப்போது விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்போது பிரியதர்ஷினி தனது கணவர் ரமணா மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்