• May 29 2023

தன்னை நூலாக்கி என்னை வடிவமைத்தாள் அன்னை- கணவரைக் கட்டிப்பிடித்தவாறு சீரியல் நடிகை நக்ஷத்ரா வெளியிட்ட போட்டோ

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியல் மூலம் பிரபலமான நக்ஷத்ரா. தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'கிடாரி பூசாரி மகுடி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். 

முதல் படத்திலேயே கிராமத்து வேடத்தை ஏற்று நடித்த நக்ஷத்ரா, அந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்திருந்தாலும்... தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலின் பக்கம் திரும்பினார்.


திரைப்படங்களில் இவருக்கு கிடைக்காத வரவேற்பை, குறுகிய காலத்தில் சீரியல் பெற்றுத் தந்தது. மேலும் இவருக்கு என தனி ரசிகர் கூட்டமும் உருவானது. இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விஷ்வா என்பவரை நக்ஷத்ரா மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.


கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி டான்ஸ் ஷோ ஒன்றில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அண்மையில் இவருகக வளைகாப்பு பங்சனும் நடைபெற்றது.இந்த நிலை தற்பொழுது புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த போட்டோ வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement