தன்னை விட 9 வயது குறைந்த நடிகருடன் காதல்- கடும் கோபத்துக்குள்ளான சீரியல் நடிகை

320

ஹிந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மூன்மூன் தத்தா. ஹிந்தியில் முன்னணி நடிகையான இவர் தற்பொழுது தாரக் மேத்தா கா ஊல்டா சஷ்மா என்ற சீரியலில் நடித்து வருகின்றார். இச் சீரியலில் இவருடன் சேர்ந்து ராஜ் அனத்கத் என்பவர் நடித்து வருகின்றார். மேலும் மூன்மூன் தத்தாவை விட ராஜ் அனத்கத்திற்கு 9 வயது குறைவு என்பதும் முக்கியமாகும்.

மேலும் தன்னை விட 9 வயது சிறியவரான ராஜை மூன்மூன் தத்தா காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பலர் இவரைக் கிண்டல் செய்வதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வேகமாக பரவியதால் கோபத்துடன் சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன்னை இந்தியாவின் மகள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவதாகவும் தன் கேரக்டரை அசிங்கப்படுத்தி பேசியதால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் பொது மக்களே, உங்களிடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் கமெண்ட் பகுதியில் இந்த அளவுக்கு மோசமாக கருத்து தெரிவித்து, அதுவும் படித்தவர்கள் கூட இப்படி செய்து நாம் முன்னேறாத சமூகம் என்று நிரூபித்துவிட்டீர்கள். நீங்கள் சிரிக்க, பெண்களை வயது, கேரக்டரை வைத்து அசிங்கப்படுத்துகிறீர்கள் என்றார்.

நீங்கள் கிண்டல் செய்வதால் ஒருவருக்கு மன உளைச்சல் ஏற்படும் என்பது பற்றி எல்லாம் உங்களுக்கு கவலை இல்லை. 13 ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கிறேன். ஆனால் என்னை அசிங்கப்படுத்த 13 நிமிடம் கூட ஆகவில்லை. அடுத்த முறை யாருக்காவது மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை செய்து கொண்டாலோ உங்களின் வார்த்தைகள் தான் அதற்கு காரணமா என்று சிந்தித்துப் பாருங்கள் என மூன்மூன் தத்தா மேலும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.