• Jun 04 2023

சஞ்சீவ் மீது காதல் மலர்ந்தது எப்படி, முதன்முறையாக மனம் திறந்த சீரியல் நடிகை ஆல்யா மானசா

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரை பிரபலங்களில் எப்படி ஜோடிகள் நிஜ வாழ்க்கையில் அமைந்தார்களோ அப்படி சின்னத்திரையில் உள்ளார்கள்.

அப்படி ஒரு தொடரில் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து அப்போதே காதல் ஏற்பட அப்படியே திருமணம், இரண்டு குழந்தைகள் பெற்று பிஸியாக இருப்பவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.

விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் நடித்துவந்த இவர்கள் இருவருமே இப்போது சன் தொலைக்காட்சி பக்கம் சென்றுள்ளார்கள். சஞ்சீவ் கயல் என்ற தொடரில் நடிக்க ஆல்யா மானசா இனியா என்ற தொடரில் முக்கிய நாயகியாக நடித்து வருகிறார்.

ராஜா ராணி தொடரில் ஆல்யாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கமிட்டாகி இருக்கிறார். அப்போது சஞ்சீவை பார்த்து ஒரு ஈர்ப்பை உணர்ந்த ஆல்யாவிற்கு அவருடனான ஏற்பட்ட புரிதல், விட்டுக் கொடுக்கும் தன்மை பார்த்து காதல் ஏற்பட்டதாக கூறியிருக்கிறார்.திருமணம் செய்துகொண்டாலும் இப்போது இருவரும் காதலித்து கொண்டுதான் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement