• Dec 01 2022

அசல் கிட்ட சொல்லி அனுப்பிவிடுங்க-பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து அந்த விசயத்தை கூறிய நிவாஷினி

Listen News!
Aishu / 4 weeks ago
image
Listen News!

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் இடம்பெறுகின்றது.இந்த சீசனில் முதலில் 20 போட்டியாளர்கள் உள்ளே வந்த நிலையில், மைனா நந்தினி ஒருவாரத்திற்கு பிறகு உள்ளே நுழைந்தார்.

மேலும் இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே, நெட்டிசன்கள் வெச்சு செய்த போட்டியாளராக இருந்தார் அசல் கோலார்.பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவதுமாகவே இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த இரண்டாவது நாளிலேயே ஆயிஷாவை வம்புக்கு இழுத்தார். குயின்ஸி, நிவாஷினி, மகேஸ்வரி என ஒருவரையும் விட்டுவைக்காமல் போகிற போக்கில் தடவிவிட்டு போய் கொண்டே இருந்தார்.

முதலில் குயின்ஸிக்கு வலை போட்டு பார்த்தார் அசல் கோலார். அத்தோடு அதில் அந்த மீன் சிக்காமல் நிவாஷினி மாட்டிக்கொண்டார். இதையடுத்து, நைசாக நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று உன்னை எனக்கு பிடிக்கும் என்று கூறி ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டில் லவ் ட்ராக்கை ஆரம்பித்தார். இதையடுத்து, நிவாஷினியை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, தடவுவதுமாகவே பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தார்.

இதனால், சமூகவலைத்தளத்தில்  அவருக்கு எதிரான கருத்துக்கள் வைரலாகி, பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் இந்த சில்மிஷ பேர்வழியை ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்ற கருத்து இணையத்தில் வைரலானது. இதையடுத்து, குறைந்த வாக்குகள் பெற்றதால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அசல் கோலாரு வெளியேறினார். அசல் வீட்டை விட்டு வெளியேறியதை நினைத்து நினைத்து நிவாஷினி அழுதுக்கொண்டே இருந்தார்,என்னால்தான் அவன் வெளியில் போனான் என புலம்பிக்கொண்டே இருந்தார் நிவாஷினி.

இவ்வாறுஇருக்கையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நிவாசினி கேமரா முன் நின்றுகொண்டு என்னுடைய அக்கா சென்னையில் தான் இருக்கிறாங்க.அவங்களிட்ட சொல்லி எனக்கு சாப்பாடு அனுப்ப சொல்லிவிடுங்க.ஒரு வேளை அவ எடுக்காட்டி அசல்கிட்ட சொல்லுங்க.நாங்க வீட்டுக்குள் இருக்கும் போதே பேசிக்கொண்டோம்.அதலால் அவனையே சாப்பாடு சென்ட் பண்ண சொல்லுங்க.நாங்க டெய்லி நோன் வெஜ் சாப்பிடுறது இல்லை.அதாலேயே அதை சென்ட் பண்ண சொல்லுங்க.இது என்னுடைய றிக்குவஸ்ற் என சொல்கிறார்.இந்த வீடியோ ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.