• Apr 19 2024

வருகிறது 'செம்பருத்தி' நாயகி ஷபானாவின் மற்றுமோர் புதிய சீரியல்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சீரியல்களுக்கு பேர் போன ஒரு தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று சன் டிவி. இதில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்திற்குமே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உண்டு. அதுமட்டுமல்லாது இந்த சீரியல்கள் டிஆர்பியிலும் டாப்பில் இருந்து வருகிறது.


மேலும் இதில் பழைய சீரியல்கள் பல முடிவுக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் அப்பா-மகள் பாசத்தை உணர்த்தும் 'கண்ணான கண்ணே' சீரியலானது விரைவில் முடிவுக்கு வரப்போவதாக ஏற்கெனவே தகவல் வெளிவந்துள்ளது.


இவ்வாறு அடுத்தடுத்து பல சீரியல்கள் முடிவுக்கு வருகின்ற நிலையில் புது சீரியல்களும் ஒளிபரப்பாக இருக்கின்றன. இந்நிலையில் தற்போது மற்றுமோர் புதிய தொடர் குறித்த தகவல் வெளிவந்திருக்கின்றது. அதாவது 'மிஸ்டர் மனைவி' என்ற பெயரில் ஒளிபரப்பாக இருக்கும் இந்தத் தொடரில் சீரியல் நடிகை ஷபானா கதையின் நாயகியாக நடிக்க உள்ளார்.


இவர் ஏற்கெனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' என்ற சீரியல்களின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கின்றார்.


இதனைத் தொடர்ந்து இவர் நடிக்கும் 'மிஸ்டர் மனைவி' என்ற இந்த புதிய சீரியலினை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement