• Apr 20 2024

செல்வராகவன் பற்றிய சீக்கிரெட் ஐ போட்டுடைத்த மனைவி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'காதல் கொண்டேன், மயக்கம் என்ன, 7ஜி ரெயிப்போ காலனி, புதுப்பேட்டை, இரண்டாம் உலகம், ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இயக்குநராக இருந்த செல்வராகவன் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கின்றார். அந்தவகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் 'பகாசுரன்' என்ற படம் வெளியாகி இருக்கிறது.


மேலும் இவர் நடிகர் தனுஷின் அண்ணன் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் தனது தம்பியைப் போலவே செல்வராகவனும் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி இருந்தது. 


இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வொன்றிற்கு சென்றுள்ளனர். அந்நிகழ்வில் செல்வராகவனிடம் நீங்க இந்த உலகத்திற்கு முன்னாடி உங்க மனைவி கிட்ட சொல்லணும் என்று ஆசைப்படுற விஷயம் என்ன எனக் கேட்கின்றனர். அதற்கு உடனே அவர் "12வருஷமாக நான் சொல்லாத வார்த்தையை இன்னைக்கு சொல்றேன், ஐ லவ் யூ" என்கின்றார்.

 

இதனைத் தொடர்ந்து செல்வராகாவன் பற்றி ஏதாவது கூறுமாறு அவரின் மனைவி கீதாஞ்சலியிடம் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் "நான் படத்தைப் பார்த்திட்டு அவரது நடிப்பை பாராட்டி இருக்கேன்" எனக் கூறினார். 


அதுமட்டுமல்லாது செல்வராகவன் பற்றி ஏதாவது சீக்கிரெட் கூறுமாறு கேட்கையில் "செல்வராகவன் எனது 2ஆவது பையன் ஓம்காரை விட குழந்தை மாதிரி ரொம்ப இளமையானவர்" எனக் கூறுகின்றார். அத்தோடு "நான் போட்டுக் கொடுக்கிற காப்பியை பார்த்து ரொம்பவே பீல் பண்ணுவார், ஆனாலும் பின்னர் திட்டிக்கிட்டே அதனைக் குடிச்சிடுவாரு" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement