• Jun 04 2023

மனைவியுடன் அந்தரத்தில் தொங்கும் செல்வராகவன்...தீயாய் பரவும் வீடியோ.!

Aishu / 4 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் செல்வராகவன் தனது மனைவி கீதாஞ்சலியுடன் அந்தரத்தில் தொங்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

சோசியல் மீடியாவில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி ஆகிய இருவரும் அவ்வப்போது தங்கள் குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வருவார்கள். 

எனினும் அந்த வகையில் செல்வராகவன் சற்று முன் தனது மனைவியுடன் ஸ்கை பார்க்கில் அந்தரத்தில் தொங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே இருவரும் பேசும் உரையாடல் காட்சிகள் உள்ளன. அத்தோடு  இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. ’எங்க தலைவனை குழந்தையாக மாத்திட்டீங்க, பத்திரமா பாத்துக்கோங்க’ ’குழந்தையை ஏன் இப்படி பாடா படுத்துறீங்க ’போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

இயக்குநர் செல்வராகவன் திரைப்படங்கள் இயக்குவது மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடித்தும் வருகிறார். எனினும் அவர் தற்போது விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் விரைவில் இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement