• Apr 20 2024

அதை மொத்தமாக கண்ணுல காட்டு பார்ப்பம்... மீண்டும் பார்த்திபனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்து வருபவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கியிருந்தார். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள இரவின் நிழல், கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரமாண்டமாகத் திரையிடப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து இரவின் நிழல் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இல்லை என ப்ளு சட்டை மாறன் தாறுமாறாக விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக பார்த்திபனும் ப்ளு சட்டை மாறனும் டிவிட்டரில் கடுமையாக மோதிக் கொண்டனர்.


இந்நிலையில், தற்போது சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவிலும் இரவின் நிழல் திரைப்படம் திரையிடப்படுகிறது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பார்த்திபன், அதில் தான் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் 114 விருதுகளை வாங்கியுள்ளதாக கூறினார். 

அதுமட்டுமல்லாது சென்னை சர்வதே திரைப்பட விழாவில் திரையிடுவதும் எனக்கு பெருமை என பேசியிருந்தார். மேலும் 21 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல், அவ்வளவு லாபம் கிடைத்ததா இல்லையா என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. அதேநேரம் இரவின் நிழல் திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களை சென்றடைந்துள்ளது எனவும் ரொம்ப பெருமையுடன் பேசினார்.

அத்தோடு "நான் இதுவரை 3 சர்வதேச விருதுகளை வாங்கிவிட்டேன் இருந்தாலும் எனக்கு விருதுகளின் மீது உள்ள ஆசை இனமும் போகவில்லை" எனவும் பார்த்திபன் அதில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவரை வம்பிழுத்து ட்வீட் செய்துள்ளார் ப்ளு சட்டை மாறன். 


அந்தவகையில் "எலே வீரபாகு... ஒருமாசமா.. 115 விருது வாங்கி இருக்கேன்னு தமிழக மக்கள் மற்றும் மீடியாகிட்ட கூசாம பொய் சொல்லிட்டு இருக்கியே. அதை மொத்தமா கண்ணுல காட்டு பாப்போம். அந்த 115 விருதுகளை குடுத்தவங்ககிட்ட பேட்டி எடுத்து போட முடியுமா? அதுல 90% உப்மா விருதுதான?" என படு ஓவராக கலாய்த்துள்ளார்.

இவ்வாறாக கிரி படத்தில் வீரபாகு கேரக்டரில் நடித்த வடிவேலுவிடம், "எலே வீரபாகு உங்க அக்காவ வச்சி தான் இந்த பேக்கரிய வாங்கினியாமே, அது உண்மையா, சீக்கிரம் சொல்லு... எனக்கு நிறைய வேலை இருக்குன்னு" ஒருவர் கேட்பதாக காமெடி சீன் வரும். அந்த காமெடிக் காட்சியின் ஸ்கீரின் ஷாட்டை டிவிட்டரில் ஷேர் செய்து, பார்த்திபனிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ப்ளு சட்டை மாறன்.

இவரின் இந்தப் பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement