விரைவில் மீண்டும் உங்களை சந்திக்கின்றேன்- தி லெஜண்ட்’ சரவணன் கொடுத்த புதிய அப்டேட்

பிரபல ஷொப்பிங் மாஸ் ஒன்றின் நிறுவினராகவும் நடத்தினராகவும் இருந்து வருபவர் தான் அருள் சரவணன். இவர் முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்களை சேர்த்து தனது கடைக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

இதனை அடுத்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ‘தி லெஜண்ட்’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.கடந்த ஜூலை 28ம் தேதி தி லெஜண்ட் ரிலீஸ் ஆன நிலையில் கலவையான விமர்சனங்களையும் இப்படம் பெற்று வருகின்றது.

மேலும் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிய இப்படத்தைத் தொடர்ந்து சரவணன் பல்வேறு சேனல்களுக்கு பேட்டியளித்தும் வருகின்றார்.

அறிமுக ஹீரோவாக இருந்தாலும் இப்படம் வசூலில் குவித்து வருகின்றது. இந்த வசூல் பற்றி பாசிட்டிவ் ஆன பாக்ஸ் ஆபிஸ் விவரங்களும் வந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் லெஜண்ட் சரவணன் தற்போது ‘விரைவில் சந்திக்கிறேன்…சந்திக்கிறோம்..’ என கூறி இருக்கிறார்.

அதனால் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது போல லெஜண்ட் வெற்றி விழாவையும் பெரிய அளவில் ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள் என தெரிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்