அண்ணாத்த பட நடிகையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும் புகைப்படங்கள்

205

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். அவர்களில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் அன்புடன் ரஜினி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமகமானவர். இதன்பின் ஒரு புதிய கதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் என்பதும் தெரிந்ததே.

அத்தோடு இதனை தொடர்ந்து கமல், ரஜினிகாந்த், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் குணச்சித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

மேலும் சில காலம் திரையுலகை விட்டு விலகியிருந்த இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை மீனா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அத்தோடு அவரின் பிறந்தநாள் பார்ட்டியில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளான சினேகா, சங்கீதா, கனிகா என பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவரின் பிறந்த நாளின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களே வைரலாகி வருவதைக் காணலாம்.