பணமோசடி செய்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் தொடர்பில் இருந்த பிரபல நடிகை- வெளியாகிய ரகசிய புகைப்படம்

236

தென்னிந்திய சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் ஹிந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் ஹிந்தியில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.அத்தோடு தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

மேலும் அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களை ஏமாற்றியும், பலருக்கு வேலை வாங்கி தருவதாகவும் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைதாகி உள்ளார். இவர் இதுவரை ரூ.200 கோடி மோசடி செய்து இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அத்தோடு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி விலை உயர்ந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இவருடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கும் தொடர்பு இருந்ததாக புகார்கள் எழுந்தன.

இதனை மறுத்த ஜாக்குலின் சுகேஷ் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறினார். இந்தநிலையில் சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படம் கடந்த ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த புகைப்படத்தை ஆதாரமாக வைத்து ஜாக்குலினிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.