சிம்புவின் மாநாடு படத்தின் திரைவிமர்சனம்

671

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்பொழுது ரீ என்ட் ரீ கொடுத்து நடித்து வரும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாநாடு . இந்தப் படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இந்தப் படத்தின் கதைக்களம் என்னவென்று பார்ப்போம்.

நண்பனின் காதலை சேர்த்து வைக்க துபாயில் இருந்து ஊட்டிக்கு வருகிறார், அப்துல் காலிக் {சிம்பு}. அங்கு திருமண பெண்ணை கடத்தி, தனது நண்பன் பிரேம்ஜிக்கு திருமணம் செய்ய முயற்சிக்கும் பொழுது, ஆள் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் மேல் காரை ஏற்றி விடுகிறார் அப்துல் காலிக்.

அப்போது, எதிர்பாரா சந்திப்பு நடக்கிறது. அந்த சந்திப்பில் தான், அப்துல் காலிக் மற்றும் தனுஷ்கோடி {எஸ்.ஜே. சூர்யா} இருவரும் சந்திக்கின்றனர். தான் போட்டுவைத்திருந்த திட்டத்தை, அப்துல் காலிக் கெடுத்து விட்டான் என்று கோபத்துடன் திட்டம்தீட்டி, அப்துல் காலிக்-கை வைத்து முதலமைச்சரை {எஸ்.ஏ. சந்த்ரசேகர் } சுட்டு கொள்ள, முடிவு செய்கிறார் தனுஷ்கோடி.

அப்படி, தான் சொல்வதை, அப்துல் காலிக் கேட்க வில்லை என்றால், அவருடைய நண்பர்களை கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். அதில் பிரேம்ஜியை சுட்டு கொன்றும் விடுகிறார். இதனால், வேறு வலியில்லாமல், முதலமைச்சரை துப்பாக்கியால் சுடுகிறார் அப்துல் காலிக். முதலமைச்சரை சுட்டது, அப்துல் காலிக் என்ற ஒரு இஸ்லாமியர் என்று கூறி, மத கலவரத்தையும் உண்டாக்குகின்றனர்.

இதன்பின், அப்துல் காலிக்கை சுற்றி வளைக்கும் போலீஸ், அப்துல் காலிகை சுட்டு கொள்கிறது. அப்துல் காலிக்கும் மரணமடைகிறார். ஆனால், இங்கு தான் கதையில் ஒரு ட்விஸ்ட். அப்துல் காலிக் இறக்கவில்லை. தலையில் துப்பாக்கி குண்டு பட்டதும், குறிப்பிட்ட ஒரு நாளுக்குள் சிக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும், அதே நாளில் பயணம் செய்கிறார். இதனை ஒரு கட்டத்தில் தெளிவாக புரிந்துகொள்ளும் அப்துல் காலிக், இது ஏன் நடக்கிறது..? எதற்காக நடக்கிறது..? என்று கண்டுபிடித்து, அதிலிருந்து எப்படி வெளியேறினார் என்பதே இப்படத்தின் மீதி கதை..

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்தில் புதிய கதைக்களத்துடன் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு. அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அத்தோடு அவருக்கு இணையான தனுஷ்கோடி கதாபாத்திரத்தில், எஸ்.ஜே. சூர்யா, வில்லனாக சிறப்பாக நடித்திருக்கின்றார்.

அத்தோடு கதாநாயகியாக வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷினி, மற்றும் பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஆகியோர் தமது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் மனோஜ் பாரதிராஜா தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல்வாதிகளாக நடித்துள்ள எஸ்.ஏ. சந்திரசேகர், Y.G மஹேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக காட்டியுள்ளனர்.

மேலும் மதங்களை வைத்து எந்த அளவிற்கு ஆழமாக அரசியல்வாதிகள் சூழ்ச்சி செய்கிறார்கள் என்றும் காட்டியுள்ளனர். திரைக்கதை நன்றாக அமைக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களில் விறுவிறுப்பு குறைந்து செல்கின்றது எனலாம். இப்படத்தில் யுவனின் பின்னணி இசையும் படத்திற்கு மிகமுக்கியமாக அமைந்துள்ளது.

மாநாடு படம் கமர்ஷியலாக நடத்தி முடித்துள்ளார்கள். இதனை கட்டாயம் தியேட்டரில் சென்று பார்க்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருவதைக் காணலாம்.