• Apr 19 2024

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்தின் திரைவிமர்சனம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சுந்தர் சி இயக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் எடுக்கும் படங்கள் கலகலப்பான கதையாகபெரும்பாலும் அமையும்.அவ்வாறு இந்த ஜெனரேஷன் காதலை மையமாக வைத்து காஃபி வித் காதல் என்ற படத்தை எடுத்துள்ளார், இப்படம் எப்படி வந்துள்ளது என்பதை பார்ப்போம் வாங்க...

காபி வித் காதல் பிக்பாஸ் அசீம், ஆரி போன்ற போட்டியாளர்களிடம் கூட பேசி ஜெயிச்சரலாம், ஆனால், இந்த படத்தின் கதையை ஒருவருக்கு புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமென்பது மிக கடுமையான டாஸ்க் ஆகத் தான் உள்ளது. அந்த டாஸ்க்கை முடிந்தளவு சொல்ல முயற்சி செய்கிறோம்.



ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், டிடி 4 பேரும் சகோதர, சகோதரிகள். இதில் ஜெய்யை ஒரு தலையாக அமிர்தா காதலிக்கிறார். அதாவது ஜெய்க்கோ பெரிய ஹோட்டல் அதிபராக வேண்டுமென்று ஒரு இடத்தை பார்க்கிறார், அந்த இடத்தின் உரிமையாளர் மகளை ஹோட்டல் கனவிற்காக ஓகே சொல்கிறார். அந்த பெண் அமெரிக்காவில் வசித்து வருகின்றார்.

அவர் அமெரிக்காவில் இருந்து வந்த போது ஜெய்க்கு பதிலாக ஜீவா பிக்கப் செய்ய போக, இவர்களுக்குள் காதல் பற்றிவிடுகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் தன் தம்பியின் கனவிற்காக தன் காதலை மறைத்து ஜீவா பெற்றோர் சொல்லும் பெண்ணையே திருமணம் செய்ய முடிவெடுக்கிறார், அவர் தான் ரைஸா வில்சன்.



ஆனால், ரைஸாவிடம் கொஞ்சம் அப்படி இப்படி முன்பே இருந்தவர் மூத்த அண்ணன் ஸ்ரீகாந்த்..இப்போது யார் யாரை திருமணம் செய்தார்கள், யார் யாரை பிரிந்தார்கள் என்பதே மீதிக்கதையாக அமைந்துள்ளது.

சுந்தர் சி எப்போதும் ஒரு குழப்பமான கதையை கையில் எடுத்து அதில் செம காமெடி காட்சிகளை புகுத்தி ஜாலியாக கொண்டு செல்வார். ஆனால், மிக மிக குழப்பான கதையை கையில் எடுத்துக்கொண்டு காமெடியை கம்மி செய்து பீல் குட் மூவியாக கொடுக்கிறேன் என ஒரு கட்டதிற்கு மேல் என்ன தாங்க சொல்ல வறீங்க மனநிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

இதில் யோகி பாபு, கிங்ஸ்லி வெண்டிங் ப்ளானராக வரும் காட்சிகள் பெரிய சிரிப்பலையை கொடுக்கவில்லை என்றாலும் அங்கங்கே சிரிக்க வைக்கின்றனர்.இப்  படத்தில் நடித்த ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், பிரதாப், டிடி என அனைவருமே எனர்ஜியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள் என்று தான் கூற வேண்டும்.



இப் படமும் நல்ல பீல்குட் ஆக இருக்க வேண்டும் என்று கலர்புல்லான காட்சிகள், துள்ளலான இசை என டெக்கனிக்கல் ஒர்க்கில் செம்ம ஸ்ட்ராங். சுந்தர் சி படங்கள் என்றால் க்ளாமர் காட்சிகள் இருக்கும், ஆனால், இதில் முதல் பாதி க்ளாமர் ஸ்கொயர், க்யூப் எல்லாம் தாண்டுகிறது.   

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி

எடுத்த கதையை முடிந்த அளவிற்கு குழப்பமில்லாமல் சொன்ன விதம்

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை

பல்ப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி பெரிய திருப்பம் இல்லாமல் செல்வது

மிகவும் எதிர்ப்பார்த்த காமெடி காட்சிகள் குறைவு


Advertisement

Advertisement

Advertisement