ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகிய ‘வீட்ல விசேஷம் திரைப்படத்தின் திரை விமர்சனம்

வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் கவனிக்கப்படும் நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் ஆர்.ஜே.பாலாஜி . இவர் ஆரம்பத்தில் காமெடியனாகவே பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனை அடுத்து தற்பொழுது கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்த வருகின்றார்.

அந்த வகையில் ஹிந்தியில் வெளிவந்த பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘வீட்ல விசேஷம் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தினை என்.ஜே. சரவணன் என்பவர் இயக்கியிருப்பதோடு போனி கபூர் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜியுடன் ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் வெளியாகிய இப்படத்தின் கதைக்களம் என்ன என்று பார்ப்போம்.

அதாவது பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆர்.ஜே. பாலாஜி { இளங்கோ }, அம்மா ஊர்வசி, அப்பா சத்யராஜ், தம்பி, பாட்டி என அனைவரின் மீதும் அளவுகடந்த பாசத்தை கொண்டுள்ளார். குடும்பத்தை போலவே தனது காதலி அபர்ணாவின் மீதும் காதலை கொண்டுள்ளார். சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையில் தீடீரென தனது அம்மா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார் பாலாஜி.

50 வயதில் தனது அம்மா கர்ப்பமாக இருப்பதை அறியும் பாலாஜி சற்று அதிர்ச்சியடைகிறார். பல இடங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். இதனால், அம்மா அப்பாவிடம் கடுமையாகவும் நடந்துகொள்கிறார். இந்த விஷயத்தினால், குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுகிறது.

மகன்கள் மட்டுமட்டுமின்றி சமூகத்திலும் ஊர்வசியை சற்று ஒதுக்கி வைத்த பார்த்து வருகிறார்கள். எங்கு சென்றாலும், உறவினர்கள் ஊர்வசியை தவறாக பேசுகிறார்கள். இந்த அனைத்து கஷ்டங்களையும் தாங்கி, ஊர்வசி தனது குழந்தையை பெற்றெடுத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை..

இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல அம்மாவாக நடித்த ஊர்வசி அப்பாவாக நடித்த சத்தியராஜ் ஆகியோரும் தமது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.நகைச்சுவை, செண்டிமெண்ட், பாசம், கணவரிடம் கண்டிப்பு என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார் ஊர்வசி.

அதேபோல சத்யராஜும் மனைவி மற்றும் அம்மா இருவரிடமும் சொல்பேச்சு கேட்டு நடந்துகொள்ளும் ஒரு குடும்ப தலைவராக நடிப்பில் பின்னியுள்ளார். ஆர்.ஜே. பாலாஜி பாட்டியாக நடித்துள்ள மறைந்த நடிகை கே.பி.ஏ.சி. லலிதா கதாபாத்திரத்தில் சிறந்து விளங்குகிறார்.

மற்றும் நடிகை அபர்ணா பாலாஜியின் தம்பியாக நடித்துள்ளவர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஹிந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படம் என்றாலும், நம் தமிழ் திரையுலகிற்கு ஏற்ப சில விஷயங்களை அழகாக மாற்றியுள்ளார்கள். மொத்தத்தில் இப்படம் குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படமாக அமைந்துள்ளது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்