• Mar 28 2023

‘ஸ்கூல்லே எத்தன லவ் பண்ணுவ’ – கலாய்த்தவர்களுக்கு பதிலடி.கொடுத்த இனியா!

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, லட்சுமணன், ரேஷ்மா, நேகா, விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை.

நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது இந்த தொடரில் பாக்கியா மட்டும் இனியா ஆகிய இருவருக்கும் லவ் ட்ரேக் சென்றுகொண்டு இருப்பது போல காண்பிக்கப்பட்டு வருகிறது. இதில் பாக்யாவின் டியூஷன் மேட்டாக ரஞ்சித் நடித்து வருகிறார்.

இன்னொரு பக்கம் இனியா தன்னுடன் பயிலும் மாணவனை காதலிப்பது போல காட்டுகிறார்கள். இப்படி சீரியலில் இளமை முதல் வயதானவர்கள் வரை காதலிக்கும் காட்சிகள் வருவதால் நெட்டிசன்கள் இதை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இனியா காதலிக்கும் காட்சிகள் வந்தது.மீண்டும் அவர் காதலிப்பது போல வருவதால் ஒரு பள்ளி மாணவிக்கு இத்தனை காதல் வருமா? என்றெல்லாம் கிண்டல் செய்கிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இனியா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ”12th பசங்க இப்போ லவ் எல்லாம் பண்ணாம தான் இருக்காங்களோ ?படங்களில் ஸ்கூல் பெண் காதலி உங்களுக்கு ஓகே ஆனால் சீரியலில் காண்பித்தால் நீங்கள் குழந்தைகளை தவறாக வழி நடத்துகிறீர்கள் என்று சொல்றீங்க. ஏன்டா ஏன். மேலும், இது எல்லாம் கதாபாத்திரம் தான் உண்மை ஒன்றும் கிடையாது, நீங்கள் பார்க்கும் விஷயங்களுக்காக எங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement