• Jun 04 2023

அண்ணா மயில்சாமியைக் கேட்டதாக சொல்லு... நடிகர் இளவரசின் உருக்கமான பதிவால் கலங்கிப் போய் நின்ற ரசிகர்கள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா திடீரென உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரைத்துறையையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 


அதாவது காமெடி நடிகர்கள் விவேக், பாண்டு, மயில்சாமி என ஒவ்வொரு சினிமாப் பிரபலங்களாக உயிர் துறந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், மனோபாலாவின் மறைவு மீண்டும் ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் மீள முடியாத கவலையில் ஆழ்த்தி உள்ளது.


இந்நிலையில் நடிகர் இளவரசு அவர்கள் தனது பேஸ்புக் profile picture ஆக மனோபாலாவின் புகைப்படத்தை வைத்து "அண்ணா மயில்சாமியை கேட்டதாக சொல்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தப் பதிவானது பார்ப்பவர்கள் பலரது மனதையும் உருக வைத்துள்ளது.  


Advertisement

Advertisement

Advertisement