• Feb 02 2023

விஜய் பட இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்:இந்த காம்போவை யாரும் எதிர்பார்க்கலையே..!

Listen News!
Aishu / 1 week ago
image

Advertisement

Listen News!

'மாவீரன்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராக என பனமுக திறமை கொண்டு  கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டான்' படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான 'டான்' படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் உருவான ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்தார். அனுதீப் இயக்கிய இந்தப்படத்தில் சத்யராஜ், உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா, பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி உள்ளிட்ட பலர் நடித்தனர்.


அத்தோடு தெலுங்கில் 'ஜதி ரத்னலு' என்ற ஹிட் படத்தை கொடுத்த அனுதீப் உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியது. கடந்தாண்டு தீபாவளி வெளியீடாக ரிலீசான இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப் படம் வெளியான ஒரே வாரத்தில் பல திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிவகார்த்திகேயன் தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். 'மண்டேலா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மடோன் அஸ்வினின் இரண்டாவது படைப்பாக இந்தப்படம் உருவாகி வருகிறது. அத்தோடு அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கும் இந்தப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இவ்வாறுஇருக்கையில்  சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாக வரவேற்பை பெற்ற படங்களை இயக்கியவர் முருகதாஸ்.மேலும்  இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் 'தர்பார்' படத்தை இயக்கினார்.

அத்தோடு இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதனையடுத்து மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கும் முயற்சிகளில் இறங்கினார் ஏ.ஆர். முருகதாஸ். இந்நிலையில் தான் சிவகார்த்திகேயனை வைத்து அவர் படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயனின் 'மான் கராத்தே' படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement