• Jun 04 2023

ரஜினியுடனான நட்பு பற்றி பேசிய சரத்பாபு...கதறி அழும் ரசிகர்கள்..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சரத்பாபு நேற்று தன் 71 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். மேலும் அவரது இறப்பிற்கு ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரைத்துறையில் எந்த ஒரு பிரச்சனைகளும் இன்றி அனைவரிடமும் நட்பாக பழகியவர் சரத்பாபு என்பதால் அவரின் பிரிவை திரைத்துறையினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் சரத்பாபுவின் மறைவையொட்டி திரைபிரபலங்கள் பலரும் அவருடன் பழகியதை பற்றியும், அவரின் குணத்தை பற்றியும் பதிவிட்டு வருகின்றனர்.

அதைப்போல ரசிகர்கள் பலரும் அவரைப்பற்றிய தகவல்களை ஆராய்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். எனினும் அந்த வகையில் அவருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் இடையேயான நட்பு பற்றி சரத்பாபுவே பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

முள்ளும் மலரும், பணக்காரன், அண்ணாமலை, முத்து ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் சரத்பாபு. அத்தோடு இப் படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ரஜினியின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார் சரத்பாபு. இவ்வாறுஇருக்கை அண்ணாமலை படத்தில் இவர்கள் இருவரின் நடிப்பும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கின்றது.

அப்படத்தில் ஒரு காட்சியில் ரஜினியை சரத்பாபு அடிப்பார். எனினும் பொதுவாக ரஜினியை படத்தில் வில்லன்கள் அடித்தால், அந்த வில்லன் நடிகரை வெளியே பார்த்தல் அவரை ரஜினி ரசிகர்கள் திட்டுவார்கள். மேலும் அந்த வில்லன் நடிகரின் வீட்டிற்கு சென்றே சில ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். எங்கள் தலைவரை படத்தில் எப்படி அடிக்கலாம் என அந்த நடிகரை பார்த்து கேட்பார்கள், அவர்களை வெறுப்பார்கள்.

ஆனால் சரத்பாபு விஷயத்தில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. அவரிடம் ரஜினி ரசிகர்கள் அன்பாகவே நடந்துள்ளார்கள். இதனை சரத்பாபுவே ஒருமுறை பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்தளவிற்கு சரத்பாபுவை பார்த்தாலே அனைவர்க்கும் பிடித்துவிடும். அப்படி ஒரு குணம்கொண்ட நடிகர், நல்ல மனிதர் நம்மை விட்டு பிரிந்ததை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது..


Advertisement

Advertisement

Advertisement