• Mar 29 2024

விஜய் முன் ஆடத் துடிக்கும் சரத்குமார்.. பிரமாண்டமாக நடந்த 'வாரிசு' இசை வெளியீட்டு விழா.. சன் டிவி வெளியிட்ட அடுத்த ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் உருவாகி உள்ள 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள இப்படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவானது பிரமாண்டமாக இடம்பெற்றது. அதில் விஜய் உட்பட ஏராளமான திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.


இந்த இந்த இசை வெளியீட்டு விழாவினை பல உண்மையான விஜய் ரசிகர்கள் பலரும் கண்டு களிக்க முடியாத நிலை உருவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து சன் டிவியில் இந்த இசை வெளியீடானது ஒளிபரப்பு செய்யப்படும் என ஏற்கெனவே கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த இசை வெளியீட்டு ஒளிபரப்பிற்கான 3ஆவது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது அதில் பல திரைப்பிரபலங்களும் டான்ஸ் ஆடுகின்ற காட்சி காட்டப்பட்டு இருக்கின்றது.


அத்தோடு சரத்குமார் பேசுகையில் "விஜய் முன்னாடி ஆடி காமிச்சிருப்பேன், இப்ப ஒரு வாய்ப்புக் கிடைச்சு நானும் அப்பிடி இப்பிடிப் பண்ணுவேன் எனக் கூறி ஆடிக் காட்டுகின்றார். அத்தோடு காமெடி நடிகர் சதீஷ் கூறுகையில் பான்ஸ் ஐ லவ் பண்ணுற ஒரே ஒரு ஹீரோ என்றால் அது விஜய் சார் தான் என்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement