• Apr 19 2024

பிறந்தநாள் கொண்டாடும் வரலக்ஷ்மி.. க்யூட் வீடியோ மூலம் சர்ப்ரைஸ் கொடுத்த சரத்குமார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் வரலக்ஷ்மி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த 'போடா போடி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.


அறிமுகப்படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை கொடுத்தது. இப்படத்தினைத் தொடர்ந்து 'தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சர்கார், சண்டை கோழி 2' என தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து வருகிறார்.


மேலும் இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த 'வீர நரசிம்ம ரெட்டி' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை வரலக்ஷ்மிக்கு அவரது தந்தையான சரத்குமார் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் தன்னுடைய மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், தன் மகள் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், அவரின் சிறுவயதுப் புகைப்படத்தினையும் பதிவு செய்து சப்பிரைஸ் கொடுத்துள்ளார். 


இந்த வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு வரலக்ஷ்மிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உட்படப் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement