• Apr 19 2024

எல்லோர் முன்னாடியும் கோதையை எச்சரித்த தமிழ்- அர்ஜுனை வீட்டை விட்டுத் துரத்த முடிவு பண்ணிய கோதை- செம குஷியில் சரஸ்வதி

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கம்பனியில் உமாபதி அர்ஜுன் மற்றும் கார்த்திக் செய்த வேலையைச் சொல்லி திட்டியதோடு இத்துடன் உங்க கம்பனியோட நாங்க வைச்ச டீலை முடிச்சுக் கொள்ளுகின்றோம். இனிமேல் என்னுடைய ஓடர் எல்லாம் தமிழ் கம்பனிக்கு தான் கொடுக்கப் போகின்றோம் என்று சொல்லி விட்டுச் செல்கின்றார்.தொடர்ந்து பேசிய தமிழ், நான் என்னோட வேலைய செய்திட்டு இருக்கிறேன். என்னுடைய வழியில் யாராவது வந்தால் இனிமேல் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்லி விட்டுச் செல்ல கோதை அதிர்ச்சியடைகின்றார்.


மேலும் வீட்டுக்குச் சென்ற சரஸ்வதி , தமிழ், நமச்சி மூவரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.அப்போது தமிழ் சரஸ்வதிக்கு நன்றி சொல்ல அர்ஜுன் பற்றிய உண்மை எல்லோருக்கும் தெரிந்து விடும் தானே எனச் சொல்ல தமிழ் அர்ஜுன் பற்றிய உண்மை தெரிய இப்போதைக்கு சான்ஸ் இல்லை. அர்ஜுன் பிஸ்னஸ்ல மட்டும் தான் ஏதோ தப்பு பண்ணிட்டான் என்று தான் நினைப்பாங்க என்று கூறுகின்றார். 

தொடர்ந்து வீட்டுக்கு வரும் கோதை அர்ஜுனையும் கார்த்திக்கையும் கண்டபாட்டுக்குத் திட்டுகின்றார். உங்களுக்கு அடுத்தவன் வாழ்க்கையைக் கெடுத்து வாழனும் என்று என்ன அவசியம் என்று கேட்டு திட்டுகின்றார். அப்போது ராகினி அர்ஜுனுக்கு சர்ப்போட் பண்ண தமிழின் அப்பா ராகினியைத் திட்டுகின்றார்.

தொடர்ந்து பேசிய கோதை கார்த்திக்கிடம் நீ இந்த மாதிரி இனிமேல் ஏதாவது பண்ணினால் கம்பனி சார்மன் பதவியில் இருந்து துாக்கிடுவேன்.சொந்தப் புத்தி வைச்சு வேலை செய் என்று கூறிவிட்டு அர்ஜுனிடம் உங்களுக்கும் இது தான் கடைசி இனிமேல் இப்படி ஏதாவது நடந்தால் கம்பனியை மட்டுமல்ல வீட்டை விட்டே துரத்தி விடுவேன் என எச்சரிக்கின்றார்.


பின்னர் கோதையிடம் சென்று அவரது கணவர் நாம தப்பு பண்ணிட்டமோ என்று தோணுது தமிழ் மேல எந்தத் தப்பு இல்லை. அடிக்கடி தப்பு பண்ணுற நம்ம மாப்பிள்ளை மீது தான் தப்பு இருக்கு கண்டிப்பாக தமிழ் அப்பிடிப் பண்ணியிருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்ல கோதை அதிர்ச்சியடைகின்றார். பின்னர் விடிந்ததும் சரஸ்வதி கலெண்டரைப் பார்த்து சிரித்து விட்டு தமிழ் விஸ் பண்ணுவார் என்று போகின்றார். ஆனால் தமிழ் எதுவும் சொல்லவில்லை. இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement