• Apr 24 2024

காமெடி நடிகனாகவே இருந்திருக்கலாம்; பழனி முருகனை தரிசிக்கச் சென்ற சந்தானம்!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்த ஒருவரே சந்தானம். அந்தவகையில் படங்களில் அவரின் நகைச்சுவை கலந்த நடிப்பினையும், அவரது ஸ்டைலையும் ரசித்த பல தயாரிப்பாளர்களும் தங்களது படத்தில் கண்டிப்பாக சந்தானம் வேண்டும் என தொடர்ந்து புக் செய்து அவரை நடிக்க வைத்தார்கள்.


மேலும் சின்னத்திரையில் ஆரம்பித்த அவரது பயணம் வெள்ளித்திரையில் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

அவர் முன்பு இருந்தது போன்று ஒரு காமெடி நடிகனாக இருந்திருந்தால் இன்னும் இன்னும் நிறைய படங்கள் நடித்திருப்பார். ஆனால் அவர் இப்போது கதையின் நாயகனாக மட்டுமே படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இவர் தற்போது பழனி முருகன் கோவிலில் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்து இருக்கின்றார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement