• Apr 20 2024

யூடியூப் பிரபலம் மைக் செட் ஸ்ரீராமுடன் கைகோர்த்த சந்தானம்- கடன் தொல்லையால் இப்படியொரு முடிவா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

முந்தைய காலத்தை விட தற்பொழுது சினிமாவில் பலர் தமது திறமைகளை காட்டி தம்மை நிரூபித்து வருகின்றனர்.அந்த வகையில் சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று மிகவும் பிரபலமாகிறார்கள். அதில் பல கதாநாயகர்கள், நடிகைகள் மற்றும் பலபேர் தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

அதேபோல் யூடியூப் மூலமாகவும் திறமைகளை வெளிப்படுத்தி மக்களிடம் சுலபமாக நுழைந்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் தான் மைக் செட் ஸ்ரீராம்.இவர் யூடியூப் மூலமாக ஏராளமான நகைச்சுவையான வீடியோக்களை வெளியிடுவார். அதன் மூலம் இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். 


இதனைத் தொடர்ந்து சில பாடல்கள் மூலம் வெள்ளித்திரை ரசிகர்களுக்கும் அறிமுகம் ஆகிவிட்டார். சில அவார்டு ஃபங்ஷன்லையும் கலந்து கொண்டிருக்கிறார்.தற்போது இவர் புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்திற்கு கடந்த ஆண்டு பூஜை போடப்பட்டது. 

இதனை அடுத்து நேற்று மைக் செட் ஸ்ரீராமின் பிறந்தநாளுக்கு இந்த படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்தப் படத்தை சந்தானத்தின் மைத்துநர் வினோத் என்பவர் இவரின் பினாமியாக தயாரிக்கிறார். ஏனென்றால் இவருக்கு இருக்கும் கடன் தொல்லையால் இப்பொழுது பினாமியாக மாறிவிட்டார்.


மேலும் இந்த படத்தை விவேக் இயக்க உள்ளார்.இந்த படத்தில் கதாநாயகியாக மானசா கிருஷ்ணன் மற்றும் ரீமி என இரண்டு புது முக நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். இவர்களுடன் ஆதித்யா டிவி சேனலின் மூலம் மிகவும் பிரபலமான கதிர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு முத்து மூவேந்தர் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்தப் படம் காமெடி மற்றும் ரொமான்ஸ் நிறைந்த படமாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் கூடிய விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக இருக்கிறது. இதிலிருந்து இப்பொழுது முக்கியமாக தெரிவது அழகு தேவையில்லை திறமை இருந்தால் சினிமாவில் வெற்றி பெறலாம் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement