• Mar 28 2024

'AK 62' இல் நடிக்க தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திக் கேட்ட சந்தானம்... அதுக்குன்னு இப்பிடியா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் சமீபத்தில் 'துணிவு' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தினை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்கள் பலரும் ரசித்தனர். அதன் காரணமாகவே இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகின்றது.


என்னதான் அஜித்தின் துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசு படமும் வெளியானாலும் வாரிசினை விட துணிவு படத்தின் வசூல் அமோகமாகவே இருந்து வருகின்றது. இப்படத்தினைத் தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதாவது 'AK62' என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் பிரமாண்டமாக இசையமைக்கவுள்ளார்.


மேலும் இப்படத்தின் உடைய படப்பிடிப்பானது விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. அத்தோடு இப்படத்தில் அஜித் சற்று வித்யாசமாக நடிக்கப்போவதாகவும், AK62 திரைப்படம் ஒரு பீல் குட் படமாக இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகின்றது. அந்தவகையில் சமீபகாலமாக அஜித் சீரியஸான படங்களிலே அதிகம் நடித்து வருவதால் AK62 அஜித் ரசிகர்களுக்கு சற்று மாறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்நிலையில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகர் சந்தானம் கமிட்டாகியுள்ளாராம். அதுமட்டுமல்லாது தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் சந்தானம் அஜித்திற்காக கேரக்டர் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம் இப்படத்திற்காக சந்தானம் 60 நாள் கால் ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக சந்தானம் டபுள் மடங்கு சம்பளம் உயர்த்திக் கேட்டதாக தகவல்கள் வருகின்றன. அந்தவகையில் அஜித் கேட்டதற்காக கேரக்டர் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்ட சந்தானத்திற்கு கேட்ட சம்பளத்தை தர தயாரிப்பு நிறுவனமும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement