• Apr 20 2024

மீண்டும் சின்னத்திரையில் காலடி எடுத்து வைக்கும் சஞ்சீவ்- எந்த சீரியலில் நடிக்கவுள்ளார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய ரசிகர்கள் அதிகம் விரும்பிப்பார்க்கப்படும் நிகழ்ச்சியாக சீரியல்களே காணப்படுகின்றன. அதிலும் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்களை கொண்டாடி வருவதும் உண்டு அந்த வகையில் சூப்பர் ஹிட்டான சீரியல்களைத் தொகுத்து வழங்குவதில் சன்டிவி ,விஜய் டிவி ,ஷு தமிழ் ,கலர்ஸ் தமிழ் என்பன முன்னிலையில் காணப்படுகின்றது.


இவ்வாறு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து பிரபல்யமானவர் தான் சஞ்சீவ். இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பன் என்பதால் அவருடைய படங்களான பத்ரி, புதிய கீதை ,மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபல்யமாகி இருக்கிறார்.

இறுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மீண்டும் சின்னத்திரையில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகின்றது.அந்த வகையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement