• Sep 25 2023

சஞ்சய் தத்தின் பிறந்தநாளுக்கு லியோ படக்குழுவினர் கொடுத்த தரமான ட்ரீட்- வைரலாகும் வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்களில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படமானது அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பெஸ்ட் சிங்கிள் பாடல் என்பன விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த நிலையில் இன்று இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சஞ்சய் தத், தனது 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். 


இந்நிலையில் லியோ படத்தில் நடித்து வரும் சஞ்சய் தத்திற்கு தரமான ட்ரீட் ஒன்றை கொடுத்துள்ளது படக்குழு.தற்போது சஞ்சய் தத் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான இந்த வீடியோவில் சஞ்சய் தத்தின் கேரக்டர் பெயரையும் படக்குழு அறிவித்துள்ளது. 

அதன்படி ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ள சஞ்சய் தத், நடிப்பிலும் மிரட்டியுள்ளார்.இந்த வீடியோவை ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement