• Apr 25 2024

கணவன் மனைவிக்கு இடையில் முற்றிய சண்டை.. விஜய்யை கடுமையாக எச்சரித்த சங்கீதா.. கோபத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் கடந்த சில மாதங்களாக லியோ படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றார். ஆனாலும் இவரது படம் குறித்த தகவலை விட சமீபகாலமாக இவர் குறித்த தகவலே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.


அதிலும் குறிப்பாக விஜய்-கீர்த்தி சுரேஷ் கிசுகிசு பெரியளவில் வைரலானது. இவை அனைத்தும் கிசுகிசு மட்டுமே என்று சொன்னாலும் சிலர் வேண்டுமென்றே இதை பற்றி பேசி பெரிதாக்கி வருகின்றனர்.


இந்நிலையில் பாலிவுட் சினிமா விமர்சகரான உமைர் சந்த் அடிக்கடி விஜய்யை சீண்டும் விதத்தில் டுவிட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பதிவில் விஜய் கீர்த்தி சுரேஷிற்கு புது கார் வாங்கி கொடுத்ததாகவும் அது சங்கீதாவிற்கு தெரியும் எனவும் கூறி இருந்தார்.


இதனையடுத்து தற்போது "விஜய்யும் அவருடைய மனைவியும் கடந்த 19ம் தேதி கடுமையாக சண்டையிட்டார்கள். இந்த சண்டையின் முடிவில் சங்கீதா, விஜய்யை கடுமையாக எச்சரித்ததாகவும்"  ட்விட் பதிவின் மூலம் கூறியுள்ளார்.


இந்தப் பதிவானது விஜய் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement