தனது மகனின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட சாண்டி மாஸ்டர்- செம கியூட் பேபி

3055

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய்டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டானவை என்பது தெரிந்ததே. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் சீசன் 3 இல் பங்கு கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் சாண்டி.

மேலும் நடன இயக்குனரரான இவர் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் கர்ணன், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களுக்கு நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இவர் சில்வியா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அத்தோடு இவர்களுக்கு ஒரு மகள் இருந்த நிலையில் அண்மையில் தான் இரண்டாவது குழந்தையும் பிறந்தது. அதனை தனது சமூகவலைத்தளத்தின் ஊடாகத் தெரிவித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் தற்போது சாண்டி முதன்முறையாக தனது மகன் ஷான் மைக்கேல் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்தப் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்டுகளும் அள்ளிக்குவிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.