Thursday, June 30, 2022

தனது மகளின் 4 வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய சாண்டி மாஸ்டர்- வைரலாகி வரும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முக்கிய நடன இயக்குநராக வலம் வருபவர் தான் சாண்டி மாஸ்டர். சின்ன சின்ன மேடைகளில் தனது நடன திறமையை காட்டி வந்த இவர் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட நபராக மாறினார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பல நடன நிகழ்ச்சிகளில் நடன இயக்குநராக இருந்து வந்தவர். இது தவிர பிக்பாஸ் சீசன் 3 இலும் போட்டியாளராகப் பங்கு கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

தற்பொழுது பல திரைப்படங்களில் நடன இயக்குநராக பணி புரிந்து வரும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்திற்கும் நடன இயக்குநராக பணி புரிந்துள்ளார்.

விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூட சாண்டியைப் பாராட்டி இருந்தார். மேலும் இவர் தனது முதல் மனைவியான காஜலை விவாரத்து செய்து விட்டு சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அண்மையில் சாண்டி தனது மகளின் 4வது பிறந்தநாளை கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை சாண்டியின் மனைவி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்